இலங்கையில் கடந்த வருடம் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் மூவர் கொண்ட குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் குறிப்பிட்டது போன்று முறைப்பாட்டுக்கான கால எல்லை நேற்றுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஈ மெயில் மூலம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் காலம் நீடிக்கப்படலாம் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்து உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக