வெள்ளி, 3 டிசம்பர், 2010

மட்டக்களப்பு வவுணதீவில் குண்டு வெடிப்பு, ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள வளவு ஒன்றில் நேற்று காலை இடம்பெற்ற வெடிகுண்டு விபத்தில் கிருமி நாசினி விசிறும் ஊழியர் ஒருவர் இறந்துள்ளார்.

கிருமி நாசினி விசிறச் சென்ற இவர் நிலத்தில் கிடந்த பொருளை எடுத்து பரிசோதித்தபோது அது வெடித்து விட்டது. இவர் படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சேர்க்கப்பட்ட பின் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிர் இழந்து விட்டார். கன்னங்குடாவை சேர்ந்த பாலப்போடி புரந்தரன் என்பவரே இறந்தவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக