வடகொரியா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அந்நாடின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்படுமென தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தென்கொரியாவிற்கு சொந்தமான தீவுப்பகுதியின் மீது வட கொரியா அண்மையில் இரு தடவைகள் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்நிலையில் அது மீண்டும் தாக்கலாம் என தென்கொரிய புலனாய்வுத் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக