உண்டாக்கி உள்ளது. ஈழத்தின் இனப் பிரச்னை வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி சொல்லும் இந்த ஆவணப்படத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை சிங்களப் படைவீரன் துப்பாக்கிக் கட்டையால் தாக்குவது, அமைதிப் படையை ஏற்றுக்கொண்டு சுதுமலையில் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய உரை, தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தியாகதீபம் திலீபன் உயிர்நீத்தது என பல முக்கிய சம்பவங்களின் வீடியோ காட்சிகளைச் சேர்த்து இருக்கிறார்கள். யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய ஆவணப்படத்தை எடுத்த சோமீதரண், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இலங்கை இனப் படுகொலை உச்சத்தில் இருந்தபோது, 'இனி என்ன செய்யப்
போகிறோம்?’ என்ற சி.டி. தமிழகத்தின் கல் மனதுக்காரர் களையும் கரைத்தது. அதைப் போலவே, பலஹீனமானவர்கள் பார்த்தால் மனஉளைச்சல் அடையக்கூடிய அளவுக்கு இனப் படுகொலை புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளி வந்துள்ளது. புத்தகத்தின் தலைப்பு, 'என்ன செய்யலாம் இதற்காக?’ மனித உரிமைப் போராளியும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் அணிந்துரையில், 'இந்த ரத்தக்கறை படிந்த புகைப்படங்களால் என் தூக்கத்தை இழந்தேன். இவ்வளவு மிருகத்தனமாக குழந்தைகளைக் கொல்லமுடியுமா? பெண்களை வல்லுறவுக் கொடுமை செய்யமுடியுமா? ஏராளமான ஆண்களையும் பெண்களையும் ஒருசேர இப்படிப் படுகொலை செய்யமுடியுமா? மனித குலத்தில் ஆகச் சிறந்தவரான புத்தரை வணங்குபவர்களா இந்த சிங்களவர்கள்?’ என்று எழுதியிருக்கிறார்.
- இரா. தமிழ்க்கனல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக