செவ்வாய், 4 ஜனவரி, 2011

சிந்தியுங்கள் உலகத் தமிழினமே! செயற்படுங்கள்!

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்!

தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் குசிப்படுத்தவும், தமிழின அழிப்புக்கான சாட்சியங்களை மூடிமறைத்து…..

உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நாடுகளில் நடாத்துமாறு வேண்டுகோள் விடுத்த இந்திய சினிமாநட்சத்திரங்களின் பரிசளிப்பு விழாவில் பங்குபற்றியதோடு ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் விசேட விருந்தினையும் ஏற்றுக்கொண்டு அவரின் மனைவி சிராந்தியுடன் சீரான குடும்பநட்பெனும் பாணியில் குதூகலமாகப் பவனிவந்து உலகநாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பி, ஸ்ரீலங்கா பாசிச கொலைகார அரசினை குற்றமற்றவர்களாக நிரூபிக்க முயன்ற நடிகை அசின், உலகத் தமிழினத்தின் இதயத்தில் ரணவலியை உண்டாக்கிய செயற்பாட்டை ஆண்டாண்டு காலத்திற்கும் மறக்க முடியுமா?

சிந்தியுங்கள் உலகத் தமிழினமே! செயற்படுங்கள்!
கொலைகாரன் ராஜபக்சேக்கு கொக்குப்பிடி நட்புக் கொண்டாடிய அசின் நடித்த காவலன் படத்தைப் புறக்கணிப்போம்!
உலகத்தமிழர்கள் உணவைத்தான் உட்கொள்ளுகின்றோம் வேறு எதையுமல்ல!
உணர்த்த வேண்டும் இதனை – நடிகை அசினுக்கு. உரிய காலமும், முறையும் இதுதான்!

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழினத்தின் போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயம்தான். முடிவல்ல. எம் போராட்டம் என்னும் பெருவிருட்சம் பலகிளைகளையும், பல வேர்ககளையும் விழுதுகளையும் கொண்டது என்பதனை உலகிற்கும், எதிரிக்கும் புரிய வைக்கும் காலத்திற்கும், இடத்தினை நோக்கியும் நாம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இப்போதுதான் நாம் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் செயற்படவேண்டியவர்களாகவும். நம் முன்னே நிறைந்து காணப்படும் வரலாற்றுக் கடமைகளை பாரபட்சமின்றிக் கையிலெடுத்துக்கொள்வோம். சிந்தாமல் சிதறாமல் நிதானமாகவும், பதட்டமில்லாமலும் செயற்படுத்துவோம்.

உடலாலும், உள்ளத்;தாலும் காயமுற்று ரணவலியோடு துடித்துக்கொண்டிருக்கும் எம் தொப்புள்கொடி உறவுகளின் வலியைப்போக்க பிளவுபட்டுக்கிடக்கும் நம் உறவுகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடுகளுக் கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமை பேணும் பணியை முன்னெடுத்தல் திரிபடைந்து கிடக்கும் சர்வதேசச் சமூகத்தின் முன்னால் எமது உண்மையான சுதந்திர இறையாண்மையின் முக்கியத்துவத்தை புரியவைப்பதுடன், அவர்களின் நட்பையும் ஐக்கியத்தையும் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், எமது போராட்ட வடிவங்களின் பல்வேறு கோணங்களையும் துல்லியமாகச் சர்வதேசத் தமிழ் உறவுகளிடம் சென்றடைவதோடு அவர்களையும் அதனுடன் ஐக்கியமடையச் செய்யும்வகையில் எமது கலை, கலாச்சாரம், ஊடகவியல் உருவாக்கவியல் என்பவற்றைச் சிறப்பான முறையில் செயற்பட வைத்தல்.

மேற்கூறியவாறு பல்வேறு வழிவகைகளையும், உத்திகளையும் உள்ளடக்கியவாறு எமது போராட்ட வடிவங்களைச் சிறப்புறச் செயற்படுத்திய நிகழ்வுகளில் முன்னிலை வகிப்பவை பிரித்தானியாவில் எமது உறவுகள் கடந்தமாதம் ராஜபக்சேயின் வரவை எதிர்த்துக்குரல் கொடுத்து திருப்பி அனுப்பச் செய்தது, அதற்கடுத்தாற்போல், கடந்தவாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதிகள் என ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மற்றும் அவரன் சீமந்த புத்ததிரன் நாமல் சகிதமாய் அரசமட்;ட உயர்குழுவினருடன் தென்னாபிரிக்கா வந்திருந்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்காவை விழாவில் உரையாற்றமுடியாயாது தடுக்கப்பட்ட நிகழ்வு.

இவை எல்லாம் வெறும் சம்பவங்கள் அல்ல. போராட்ட வரலாற்றின் சரித்திர வலாற்றுப் பதிவுகள். அதே போன்று தான் விடயம் சிறிதாக இருந்தாலும், விசனம் பெரிதாக வெளிப்பத்தப்பட்டதுதான் தமிழகத்து தமிழ்த் திரைப்படத்றையினனரின் வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு ஸ்ரீலங்கா அரசிற்கு உலக அரங்கில் நல்லபெயர் வாங்கிக் கொடுக்க நடிகை அசின் முன்னின்று காட்டி வழிநடத்திய ஜஃபா சர்சதேச திரைப்பட விழா.

சிங்களத்திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மாலினி பொன்சேகா உட்பட இலங்கையின் பல முன்னணி நட்சத்திரங்கள்கூட புறக்கணித்த ஜஃபா சர்சதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரையுலகின் பல முன்னணி முன்னணி நட்சத்திரங்களால் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இந்திய முன்னணி நட்சத்திமாகத் தன்னைத்ததானே நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் சில சாதாரண இந்தித் திரைப்பட நட்சத்திரங்களுடன் தமிழ்திரையுலகத்தினால் வளர்க்கப்பட்ட நடிகை அசினும் கலந்துகொண்டமை இந்தியத் திரைப்பட உலகத்திற்கே பெரும் அவமானமாக சர்வதேசத்தின் கணிப்பிற்குள்ளனதாக பதிவிற்குள்ளாகியிருப்பது காலங்கள் எத்தனை சென்றாலும் கழித்தெழுத முடியாத களங்கப்பட்ட பதிவிற்கு உள்ளகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

அத்தகைய நிலையில் அசின் பல லட்சங்களை ஊதியமாகப்பெற்று நடித்து வெளிவரவிருக்கும் படம்தான் காவலன். இந்தப் படமானது உலகத் தமிழினத்திற்கு தமிழ்மக்களிடையே திரையிடப்படுமானால் அது உலகத்தமிழினத்திற்கு ஒரு சவால் மட்டுமல்ல சாபக்கேடான விடயமுமாகும். எனவே அன்பான உலகத் தமிழ் உறவுகளே! தமிழ்த் திரைப்பட வெளியீட்டாளர்களே! நாமெல்லாம் ஒருதாய் மக்கள். இனமானம், தன்மானம் என்பது நம் எல்லலோரதும் பொதுச் சொத்து. அதைப் பாதுகாப்பது எம் தலையாய கடமை. பிரத்தானிய, தென்னாபிரிக்க நிகழ்வுகள் எமக்களித்த மாபெரும் வெற்றியைப் போன்று காவலன் திரைப்படத்தைப் புறக்கணிக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுக்கும் பணியில் நமது கரங்களை இறுகப்பற்றிக்கொள்ளுவோம் என்று தமிழன்னையின் பெயரால் அன்புடனும் பாசத்துடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாகட்டும்.
விசுவாமித்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக