வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்று நான் கூறியதுக்கு அரசாங்க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்னை தேசத்துரோகி என்று நாமம் இட்டனர். ஆனால், இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களே நிலைமைகளை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு விடயம் கட்டுமீறிச் சென்றுள்ளதாக நவசம சமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து அவர் மேலும் கூறுகையில்;
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர் நடவடிக்கைகளின் பின்னர், அதாவது போர் முடிவுற்ற பின்னர் வடக்குகிழக்கு பகுதிகளை கொள்ளையிடும் கைங்கரியத்தில் ஈடுபடுகிறது. இப்பகுதிகளை சர்வதேச கம்பனிகளுக்கு தாரைவார்ப்பதில் அதிக அக்கறையாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர்களின் போது கொள்ளை பிரதானமாக இருந்தது. போரின் போது உதவியவர்களை பின்னர் தண்டிப்பது வழமையாக இருந்தது.
இன்று போரில் உதவிய விபீசணன்களும் தண்டிக்கும் நிலைக்கு அரசின் போக்கு காணப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமான தமிழ்த் தலைமைகளே கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கிலும் இதேநிலைதான் காணப்படுகிறது. அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கருத்துகள் இதற்கு சாட்சியாக உள்ளது.
நாட்டில் 20 வீத உயர் வகுப்பினர் 80 வீத ஏழைகளை உறிஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் ஏழைகளை மாத்திரமல்ல ஓரளவு வசதி உடைய மத்தியபிரிவினரையும் வதைக்கத் தொடங்கியுள்ளது.
இன்று ஆட்சியாளருக்கு எதிராக கடும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. அனைத்து சக்திகளையும் எம்முடன் இணைத்து போராட நாம் தயாராகிவருகின்றோம். ஆட்சியில் உள்ளவர்கள் கூட எம்முடன் இணையலாம்.
அவர்கள் சேரவிரும்பினால் எம்முடன் இணையலாம். எமது பாதை பூக்கள் நிறைந்தன்று அல்ல முட்கள் நிரம்பிய பாதைகள். எதிர்ப்புகளை கண்டு அஞ்சாது போராட தயாராகும் அனைவரையும் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்று நான் கூறியதுக்கு அரசாங்க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்னை தேசத்துரோகி என்று நாமம் இட்டனர். ஆனால், இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களே நிலைமைகளை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு விடயம் கட்டுமீறிச் சென்றுள்ளதாக நவசம சமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து அவர் மேலும் கூறுகையில்;
முன்னைநாள் போராளித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தா யாழ்.நிலைமைகளை பாராளுமன்றத்தில் தெளிவு படுத்தியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர் நடவடிக்கைகளின் பின்னர், அதாவது போர் முடிவுற்ற பின்னர் வடக்குகிழக்கு பகுதிகளை கொள்ளையிடும் கைங்கரியத்தில் ஈடுபடுகிறது. இப்பகுதிகளை சர்வதேச கம்பனிகளுக்கு தாரைவார்ப்பதில் அதிக அக்கறையாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர்களின் போது கொள்ளை பிரதானமாக இருந்தது. போரின் போது உதவியவர்களை பின்னர் தண்டிப்பது வழமையாக இருந்தது.
இன்று போரில் உதவிய விபீசணன்களும் தண்டிக்கும் நிலைக்கு அரசின் போக்கு காணப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமான தமிழ்த் தலைமைகளே கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கிலும் இதேநிலைதான் காணப்படுகிறது. அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கருத்துகள் இதற்கு சாட்சியாக உள்ளது.
நாட்டில் 20 வீத உயர் வகுப்பினர் 80 வீத ஏழைகளை உறிஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் ஏழைகளை மாத்திரமல்ல ஓரளவு வசதி உடைய மத்தியபிரிவினரையும் வதைக்கத் தொடங்கியுள்ளது.
இன்று ஆட்சியாளருக்கு எதிராக கடும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. அனைத்து சக்திகளையும் எம்முடன் இணைத்து போராட நாம் தயாராகிவருகின்றோம். ஆட்சியில் உள்ளவர்கள் கூட எம்முடன் இணையலாம்.
அவர்கள் சேரவிரும்பினால் எம்முடன் இணையலாம். எமது பாதை பூக்கள் நிறைந்தன்று அல்ல முட்கள் நிரம்பிய பாதைகள். எதிர்ப்புகளை கண்டு அஞ்சாது போராட தயாராகும் அனைவரையும் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக