வியாழன், 6 ஜனவரி, 2011

நலன்புரி நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுதலை செய்யபபடவர் யாழில் கொலை, ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குளுவினால் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கந்தசாமி இருதயன் எனும் இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து நலன்புரி நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுதலை செய்யபபட்டுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வசித்துவந்த போது குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் 05 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிணறு ஒன்றில் வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை முள்ளியைச் சேர்ந்த 35 வயதுடைய ரவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்யாழில்  கொலை ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குளுவினால் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கந்தசாமி இருதயன் எனும் இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து நலன்புரி நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுதலை செய்யபபட்டுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வசித்துவந்த போது குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் 05 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிணறு ஒன்றில் வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை முள்ளியைச் சேர்ந்த 35 வயதுடைய ரவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக