சனி, 22 ஜனவரி, 2011

மூன்றுநாள் விஜயத்தின் நிறைவில் செய்தியாளர் மாநாட்டில் கத்தரின் பிராக் கருத்து வெளியிடுகை

வடக்கிற்கான விஜயத்தின் போது அங்குமிங்குமாக செறிவு குறைந்த நிலையில் மக்கள் குடியிருப்புக்கள் குறைந்தளவிலான மீள் குடியேற்றம் ஆட்களில்லாத வீடுகள் என்பவற்றையே  தம்மால் அவதானிக்க முடிந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரணத்திற்கான பிரதி ஒருங்கிணைப்பாளருமான கத்தரின் பிராக் தெரிவித்தார். இலங்கைக்கு மேற்கொண்ட மூன்றுநாள் விஜயத்தின் நிறைவில் கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றுமாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவி யலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.நா..வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயும் கலந்துகொண்டார்.

இந்த மூன்று நாள் விஜயத்தின் போது ஐநா உதவிச்செயலாளர் அமைச்சர்கள் உள்ளுர் அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உதவி வழங்குநர்கள் மற்றும் ஐ.நா. முகவர் அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இவர் அங்கு முகாம் களில் இருந்து விடு விக்கப்பட்ட நிலையில் மீண்டும் தம் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இதனையடுத்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கத்தரின் பிராக் மேலும் கருத்து வெளியிடுகையில் இலங்கையின் தற்போதைய மனிதாபிமான சூழ்நிலையை மதிப்பீடு செய்வதற்காக வந்திருந்தேன். அண்மையில் ஏற் ப ட்ட வெள்ளம் காரணமாக கிழக்கிலும் வடக்கில் முன்னர் மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் முக்கியமானதும் உட னடியானதுமான மனிதாபிமானத் தேவைகள் காணப்படுவதை அவதானித்தேன்.

மீளத்திரும்பியவர்களில் பலருக்கு வாழ்விடம் நீர்வசதி கழிவிடவசதிகள் சுகாதாராம் என் பவற்றறை பெறும் வாய்ப் பு க் கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே காணப்படுகின் றன. இத்தகைய சமூகத்தவர்கள் மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் இன்றியமையாத மனி தாபி மானத்தேவைகளுடன் காணப்படுகின்றனர். இவை தொடர்பில் உடனடியான கவனம் செலுத்தப்படவேண்டும்.

எனது விஜயத்தின் போது 5 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றின் தலை வ ருடன் கலந்துரையாடினேன். கடந்த நவம்பர் மாதத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குறி த்த குடும்பத்திற்கு அரசாங்கமும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகலாயமும் வழங் கிய உதவி மூன்று மாதத்திற்கே போதுமானதென அவர் கூறினார்.

அதன் பின்னர் அவரது நிலை தொடர்பாக வினவியபோது செய்வதறியாது தலையசைத்ததார். அதனை வைத்தே அங்கு எவ்விதமான பொருளா தார நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பதை ஊகித்துக் கொள்ள என்னால் முடிந்தது என்றார்.

அப்போது கிழக்கிற்கான விஜயத்தை மட்டக்களப்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தியது ஏன் எனவும் அதன் போது பொதுமக்களை ஏன் சந்திக்கவில்லை எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. உதவிச்செயலாளர். பொது மக்களைச் சந்திக்கவில்லை என்பது உண்மைதான். நேரப்பற்றாக்குறையே இதற்கு முக்கிய காணம் எனக் கூறினார்.

இதன் போது கருத்துரைத்த ஐ..நா. வதிவிடப்பிரதிநிதி நீல் புனே களத்திலுள்ள ஐ.நா.. பணியாளர்கள் அங்கு நடப்பவை தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை வழங்கி வருகின்றமையால் நிலைமையை தாம் முற்றாக அறிந்து வைத் திருப்பதாக குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கத்தரின் பிராக்கின் விஜயத்தின் போது கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் மக்களுக்காக அவசர நிதியாக 51 மில்லியன் அமெ ரிக்க டொலர்களை திரட்டுவதற்கான கோரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

அத்துடன் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்காக ஐ.நா. மத்திய அவசர உதவி நிதியிலிருந்து 6மில்லியன் அமெரிக்க டொலர் களை வழங்குதாகவும் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக