கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருள்கள் ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்றுக்காலை மாங்குளம் பகுதியில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது .இந்தச்சம்பவம் மாங்குளம் இராணுவ முகாமுக்கு முன்பாக நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது:
நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு தனியார் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்த மான பாரஊர்தியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருள்கள் எடுத்துவரப்பட்டன. அவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கு மேல் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டது.ஓடிக்கொண்டிருந்த பார ஊர்தியில் திடீரெனத் தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த சாரதியும், உதவியாளரும் அதனை உடன் நிறுத்தி விட்டுப் பாரஊர்தியில் இருந்து குதித்துத் தப்பிக் கொண்டனர். இதன்பின் பார ஊர்தி முற்றாகத் தீப்பிடித்த எரிந்து நாசமானது. உடனடியாக அவ்விடத்துக்கு வந்த படையினர் தீயை அணைக்கப் பெருமுயற்சி மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை.இது தொடர்பாக அதன் உரிமையாளரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக