ஞாயிறு, 23 ஜனவரி, 2011

சர்வதேசப் போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சாவை கைதுசெய் அல்லது நாடு கடத்து - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

அமெரிக்காவில் தங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (24) போராட்டம் ஓன்றை மேற்கொள்ளப்போவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யுமாறு அல்லது அவரை நாடுகடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

மகிந்தா ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி, தமிழ் இன அழிப்பிலும், பெரும் தொகை தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும், தமிழ் மக்களை காமாமல்போகச் செய்ததிலும், பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்செயல்களிலும் அவருக்கு பங்குண்டு. எனவே அனைத்துலக சட்டங்களின் படி அவர் கைது செய்யப்படவேண்டும்.

போராட்டம் நடைபெறும் இடம்: Lafayette Square , In front of the White House, Washington , DC

நேரம்: காலை 11.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை.

காலம்: திங்கட்கிழமை, 24.01.2011.

எனவே தமிழ் மக்கள் எல்லோரும் எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக