யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ஸியா புட்டினிஸ் அம்மையார் நாளை திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையம் யாழ்ப்பாணம் நாலாம் குறுக்குத் தெரு, 159ம் இலக்க சமூக செயற்பாட்டு நிலையத்தில் செயற்படவுள்ளது.
இந்நிலையத்தில் அமெரிக்க நாட்டு புவியியல் வரலாறு, நாடு அடைந்துள்ள முன்னேற்றம், உலக நாடுகளுக்கான அமெரிக்க உதவி, கலாசார பண்பாட்டு பழக்கவழக்கங்கள் போன்ற முக்கிய தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன், சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். இங்கு இன்டநெட் வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அமெரிக்க தூதுவர் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து, அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதுடன், எதிர்கால செயற்பாடுகளை திட்டமிடுவதற்காக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து உரையாடுவார்.
யாழ். மாவட்ட பேராயார் கலாநிதி தோமஸ் செளந்திரநாயகத்தை சந்தித்து யாழ்ப்பாண நிலைமை குறித்து கேட்டறிவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக