“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு!” என்றெல்லாம் நமது முன்னோர்கள் தமிழனைப் பார்த்து பாட்டாகப் பாடி சென்றுள்ளனர்.
உலகத்திற்கு ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் சொல்லிக் கொடுத்த இனம் இன்று ஒழுக்கமின்றி ஒற்றுமையின்றி உலகம் முழுவதும் சிதறி கிடக்கின்றனர். சீரழிந்து உறவுகள் அற்று எத்தனைப் பிரிவுகள்? எத்தனைப் பிளவுகள்?
தமிழா உன் தாய் மொழி தமிழா? நீ உணர்வுள்ள தமிழனா? ஏன் இந்தப் பிரிவுகள் ஏன் இந்த பிளவுகள்? நீ ஒன்றுபடுவது எப்போது? உலகத்திலுள்ள சிறுபான்மை பெரும்பான்மை இனங்களெல்லாம் காரித்துப்புகின்ற அளவிற்கு உன் இனம் தாழ்ந்து கிடப்பது ஏன்? தரமிழந்து போனது ஏன்?
உலகமே கை கொட்டி சிரிக்கிறவரைக்கும் உன் உணர்வுகளை இழந்து நிற்பது ஏன்? கேவலம் சில சீரழிந்த இனங்கள் கூட உன்னைப் பார்த்து கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் ஏன்? மானமில்லையா? உணர்ச்சிகள் இல்லாத நடைப்பிணமா நீ!
ஏன் இந்த இழிர்ந்த நிலை? உலகம் உன்னைப் பார்த்துக் கை கொட்டிக் சிரிப்பது உனக்கு கேட்கவில்லையா? உன் உணர்வு, உணர்ச்சி எல்லாம் செத்துப் போயிவிட்டனவா? உலகத் தமிழரெல்லாம் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழே ஒன்றுபட்டு நிற்பது எப்போது?
காலங் காலமாகக் கட்டிக் காத்து வந்த இனமானமெங்கே? சீரழிந்து கிடக்கும் உன் இனம் எப்போது தலை நிமிர்ந்து நிற்பது? அடுத்து வரும் உன் சந்ததியினருக்கு நீ விட்டுச் செல்லப் போவது என்ன?
உலகத் தமிழினமே! ஒன்று படு!
உறவுகளை, உணர்வுகளை ஒருமுகப்படுத்து, உலகம் உன்னைக் கண்டு பயப்படட்டும் பாரெல்லாம் உன் புகழ் பாடட்டும்!
தமிழனமே தலைநிமிர்ந்து வாழ்!
உன் இனத்தைக் கண்டு சிரிக்கும் உலகிற்கு உன் வீரத்தைக் காட்டு, தறி கெட்டவர்கள் புறமுதுகுக் காட்டி ஓடட்டும்!
உலகத் தமிழனமே ஒன்று படு!
கெஞ்சிக் கெஞ்சி வாழ்ந்தது போதும் உன் மெய் முகத்தை காட்டு ஊரும் உலகமும் உன்னைக் கண்டு அஞ்சி ஓடட்டும்!
உலகத் தமிழினமே ஒன்றுபடு!
உன்னை விரட்டுபவர்களை நீ விரட்டு…பொல்லாதவர் புறமுதுகுக் காட்டி ஓடட்டும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக