சனி, 8 ஜனவரி, 2011

இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! : தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன?

முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகள்
 அழிக்கப்பட்டு விட்டதாக கூறிவந்த சிங்கள அரசு தற்பேது புலிகள் பயத்தில் கிறுக்குப் பிடித்து உளற ஆரம்பித்துள்ளது என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் சிறப்பு செய்தி தமிழகத்தில் வெளிவரும் மாதமிருமுறை பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

ஈழத்தில் எமது இனம் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்வுக் கொந்தளிப்பை தமிழகத்தில் ஆட்சியுள்ளோர் திட்டமிட்டு அடக்கி வந்தனர். உணர்வு மேலீட்டாள் தமது உடலை ஆயுதமாக்கி தமிழக அரசின் முகத்திரையை கிழித்தெறிய முத்துக்குமார் உள்ளிட்டோர் தீச்சுவாலைகளை தமது மேனி படரவிட்டு உயிர்தியாகம் செய்து தமிழகத்தை கொதிநிலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

அதற்கும் சளைக்காத கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இவர்களது ஒப்பற்ற தியாகத்தை களங்கப்படுத்தியதுடன் தமிழக மாணவர்களது கையில் சென்ற போராட்டக்களத்தை சில புல்லுருவிகளை கொண்டு நீர்த்துப் போகச் செய்திருந்தது. அத்துடன் நின்றுவிடாது தமிழ் இனம்.. தமிழ் மொழி.. தமிழர் பண்பாடு.. கலாச்சாரம்.. எனக் கூறிக் கொண்டு எவர் வந்தாலும் இல்லாத இறையாண்மையை மீறிவிட்டதாக கூறி தேசியபாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து டெல்லி(சோனியா) விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டது தமிழக அரசு.

தமிழைப் பற்றிப் பேசினாலும் குற்றம், ஈழத்தமிழர்களை பற்றி மூச்சு விட்டாலும் குற்றம், பிரபாகரனைப் பற்றி நினைத்தாலே குற்றம் எனும் தமிழக அரசின் புதிய கொள்கை தமிழகத்தை ஆட்சி செய்துவரும் நிலையில் தற்போது புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்திரிகைகள் வாரப்பத்திரிகைகள் என்பன இதோ ஈழப் போர் ஆரம்பிக்கப் போகின்றது… ஈழப்போர் ஆரம்பித்து விட்டது.. களத்தில் பிரபாகரன்.. அவுத்திரேலியாவில் பிரபாகரன்.. என்னும் தலைப்புகளில் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருவது ஆச்சரியமாக உள்ளது.

இந்த பத்திரிகைகள் அரசின் செய்தித்துறையின் தணிக்ககைக்குட்படுத்தப்படுவதில்லையா..? உணர்வாளர்களான சில இயக்குநர்கள் எடுத்த திரைப்படங்கள் தணிக்கைக்குழுவின் கெடுபிடியாள் பெட்டிக்குள் உறங்கும் நிலையில் இந்த பத்திரிகைகளுக்கு மாத்திரம் எவ்வாறு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது என்பது ஆச்சரியம்தான்.

இவற்றையெல்லாம் மீறி இவ்வாறு பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு காசு பார்பது ஒருபக்கமிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சூழ்ச்சித் திட்டங்களிற்கு அடித்தளம் அமைக்கும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

புலி வருது… புலி வருது… என்று கூறி பரபரப்பினை ஏற்படுத்தி பின் உண்மையிலேயே புலி வரும்போது எவ்வளவு எடுத்துக் கூறியும் நம்பாது இருந்தது என கதை அறிந்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கதையாகும். புலி வரப்போது.. புலி வருது.. புலி வந்திட்டுது.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு சில நரிகளை களமிறக்கி நாசவேலைகளில் ஈடுபடுத்தி தமது எண்ணத்தை செயற்படுத்தி அதன் பழியை புலிகள் மீது போடுவதே இந்த செய்தியின் நோக்கமாக இருக்கும்.

இந்த சதித்திடடத்தின் பின்னாள் ஒழிந்து இருப்பது இந்திய உளவுத்துறையேதான். இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டிலையே இவ்வாறான செய்திகள் வெளிவருகின்றன. தற்போதும் அவ்வாறே இந்த புதுக்கதை களமிறக்கப்பட்டுள்ளது.

15ற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் சிறிலங்காவில் புலிகள் போரை ஆரம்பிக்க உள்ளதாகவும் அமெரிக்காவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட புலிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. (15 நாடுகள் இல்லை பெரும்பாலான நாடுகள் தமிழீழத்தை ஆதரிக்கத்தான் போகுது. தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா. சபையில் பட்டொளி வீசி பறக்கும் நாள் விரைவில் வரத்தான் போகுது. அதற்குள் ஏன் இந்த அவசரம் என்டுதான் விளங்கவில்லை.)

இந்த ஆண்டு சூலை மாதத்திற்குள் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தம்மை ஒருங்கிணைக்கும் பணியிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்புடன் இருப்பதாகவும்,அதன் பின்னர் புலிகளின் ஆலோசனைக் கூட்டம் வெளிநாடு ஒன்றில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தொடர்கின்றது.

2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் சபை ராசபக்சவின் மீது போர் குற்றம் சுமத்தி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் சிறிலங்காவில் தமிழர்களுக்கு தனிஈழம் வழங்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை இரண்டும் நடைபெறாவிட்டால் இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் போர் நடைபெற இருப்பதை தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்ற உண்மையையும் கூறியுள்ளனர்.

சமாதானம் பேசி சதிசெய்த நாடுகளில் இருந்து துரோகம் இழைத்த இந்தியா உள்ளிட்ட எதிரி சிங்களன் வரை கதிகலங்க தமிழர் அரசமைத்து வருவான்டா எங்கள் தலைவன் பிரபாகரன். அது சர்வ நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக