அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையும் இந்த வருடத்துடன் ரத்தாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதிக்காக அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
கடந்த வருடம் இலங்கையின் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்க தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள், அமெரிக்க வர்த்த சம்மேளனத்துக்கு முறைபாடு தெரிவித்திருந்தன.
இதனை அடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வர்த்தக பிரதிநிதிகள், இலங்கையின் தொழிலாளர் உரிமை தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தி சென்றனர்.
இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் நீடிக்கப்பட வேண்டிய இந்த வரிச்சலுகை, இந்த வருடம் இதுவரையில் நீடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீதான அவநம்பிக்கை காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்து செய்தமையைப் போன்று, இதனையும் ரத்து செய்யும் நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக