வியாழன், 24 பிப்ரவரி, 2011

இனப்படுகொலை புரிந்தவனுக்கு 27 வருட சிறைத்தண்டனை..!

தன் இனத்தை மட்டுமல்ல தன் இனம் அல்லாத இன்னொரு இனத்தையும் போர் என்ற போர்வையில் படுகொலை செய்து அழிப்பதும், அதற்குத் துணை போவதும் சர்வதேச போர்க்குற்றமாகும். அந்தவகையில் கடந்த 1998 – 99 காலப்பகுதியில் தன் இனம் அல்லாத அல்பேனியர்கள் மீது இனக்குரோதம் கொண்டு இராணுவத்தை ஏவினான் சேர்பிய போர்க்குற்றவாளியான விலாஸ்ரிமிர் றோஜ்விக் என்ற சேர்பிய போலீஸ் ஜெனரல். பல்லாயிரம் அல்பேனியர்களை கொன்று புதைக்க உத்தரவிடப்பட்ட இவனுக்கு எதிராக ஒல்லாந்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் நேற்று 27 வருடங்கள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. நீ செய்த தவறுக்கு 27 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி கெவின் பாக்கர் தெரிவித்தபோது குற்றவாளி தண்டனையை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டான். சம்பவம் நடைபெற்று 11 வருடங்களின் பின் வழங்கப்படும் இந்தத் தீர்ப்பு போர்க் குற்றவாளிகள் உலகில் எங்கிருந்தாலும் என்றோ ஒருநாள் சட்டத்தின் பிடியில் சிக்குப்பட வேண்டியது தவிர்க்க முடியாததே என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக