திங்கள், 14 பிப்ரவரி, 2011

சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர்,யுவதிகளுக்கு சங்கிலியன் படை எச்சரிக்கை!

ஒட்டுக் குழுக்களின் ஆதரவுடன் யாழ்.குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர், யுவதிகளுக்கு   ”சங்கிலியன்” படை எச்சரிக்கை விடுத்துள்ளது.   யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபலமான பாடசாலைகளின் மதில்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அவசர அவசரமாக இன்று காலை படையினரால் அகற்றப்பட்டதாக  அறியவருகிறது.

”சங்கிலியன்” படையினரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் வருமாறு:
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!

அன்பான தமிழ் மக்களே,

நாம் எத்தனையோ இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் கடந்து வந்து தமிழ் மானத்தைக் காத்துவருகின்றோம். எமது இனம் சீரழிந்துபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இரத்தத்தால் சிவந்த தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானங்கெட்ட தமிழர் அல்லர். மானங்கெட்டு வாழ்பவர்கள் தமிழர்கள் அல்லர்.

அன்பான உறவுகளே,

அண்மைக்காலத்தில் யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் சமூகச் சீரழிவுகளை உடனடியாக நிறுத்துவதற்காக எம்மால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கி எமது இனத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எதிரியானவன், பல வழிகளில் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தமிழினத்தை அழித்து வருகின்றான். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைய யாழ்ப்பாணத்தில் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஆபாசத் திரைப்படங்களை புழக்கத்தில் விடுவதோடு ஆபாச இணையத்தளங்களையும் மறைமுகமான விபச்சார விடுதிகளையும் நிறுவி எமது இளைய தலைமுறையை ஒரு கீழ்த்தரமான சிந்தனையுடையவர்களாக்க எதிரி முனைகின்றான். இதற்கு தமிழர் தாயகத்தில் இயங்கிவரும் ஒட்டுக்குழுக்கள் எதிரியுடன் கைகோர்த்து எமது இனத்தை சீரழித்துவருகின்றனர். இச் செயல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. எமது பண்பாட்டைச் சீரழிக்கின்ற பாலியல் பலாத்காரம், பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் நபர்கள் அச் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.

நன்றி

சங்கிலியன் படை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக