அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்ற வகையில் பிரபாகரன் மாத்திரமே தண்டனைக்குரியவர். அதற்காக அவரது உறவினர், நண்பர்கள் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கையின் கௌரவமான பிரஜைகளாவர்.
அந்த வகையில் ஒரு வயோதிபத் தாய் என்ற வகையில் பிரபாகரனின் தாயாரின் இறுதிச் சடங்குகள் குறித்து அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும். அதற்கான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பார்வதி அம்மாளின் ஒரு மகனும் இரண்டு மகள்மாரும் வெளிநாடுகளில் வசதியாக வாழும் நிலையிலும் கடைசி நிமிடம் வரை அவர் பராமரிக்கப்பட்டது கூட அரசாங்கத்தின் மருத்துவமனையில் தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு அரச அதிகாரிகள் அவரைச் சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
அதனைப் போன்றே அவரது இறுதிச் சடங்குகளின் போதும் தேவையான ஒத்துழைப்பை அதிகாரிகள் மூலமாக அரசாங்கம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி செயலக அதிகாரி கூறுவது போன்று அரசாங்கம் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் தம்பதியினரைப் பார்க்கவில்லை என்பதையும், அவர்கள் இருவரையும் விடுதலைப்புலிகளின் தலைவருடைய பெற்றோர் என்ற வகையில் அவர்கள் இருவரையும் புலிகளாகவே கருதி கைது செய்து பனாகொடை முகாமில் தடுத்து வைத்திருந்தமையையும், சுகவீனமுற்றிருந்த போது உரிய சிகிச்சை வழங்கப்படாமல் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமாகியமையும் தமிழ் மக்களால் என்றைக்கும் மறக்கமுடியாத துயரச் சம்பவங்களாகும்.
அத்துடன் பார்வதியம்மா வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் கடும் சுகவீனமுற்றிருந்த வேளையில், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளை பார்வதியம்மா பார்க்க விரும்புகிறார். என அவரைப் பராமரித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் அரசாங்கத்திடம் அவரின் பிள்ளைகள் இலங்கைக்கு வர அனுமதியளிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்த வேளையில் சிறிதும் தயவு தாட்சண்யம் இன்றி உடனடியாக அவரது கோரிக்கையை நிராகரித்தமையையும் தமிழ்மக்கள் மறக்கமாட்டார்கள்.
தற்போது விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயாரான பார்வதியம்மாள் இறந்துவிட்டார் என்ற சந்தோச மிகுதியினாலேயே அரசாங்கம் அவரது இறுதிக்கிரியைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இருவரையும் பொதுமக்களாகவே கருதுவதாக தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம் அவர்கள் இருவரினது இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள அவர்களின் பிள்ளைகள் இங்கு வர அனுமதியளிக்காதது ஏன் எனவும் தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக