
லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி பொதுமக்களை சுட்டுத்தள்ளும்படி போட்ட உத்தரவு மிகப் பயங்கரமான நரபலிகளை எடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு மேல் லிபியப் படையினர் சரமாரியாக துப்பாக்கி ரவைகளை பொழிந்த வண்ணமிருப்பதாகவும், திரிப்போலி நகரமே பற்றி எரிவதாகவும் பெண்மணி ஒருவர் அலறியபடி தெரிவித்தாக அல் ஜஸீரா தொலைக்காட்சி சற்று முன் தெரிவித்தது. ஆகாய விமானத்தில் பறந்தபடி மக்களை சுட்டுக் கொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசி துளி இரத்தம் இருக்கும்வரை ஆட்சியை விடமாட்டேன் என்று அறிவித்த கடாபி இப்போது தனது சொந்த சகோதரங்களின் மீதே சுய ரூபத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். தண்ணீர், மருந்து, சாப்பாடு அனைத்தும் நிறுத்தப்பட்டு படுகொலை அரங்கேறியபடியிருக்கிறது. கண்டிப்பாக இது மானிடப் பெரும் படுகொலை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா மக்கள் மீதான படுகொலைக்கு கவலை தெரிவித்துள்ளது. நிலமைகள் மேலும் மோசமாக மாற வழியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக