பாலஸ்தீன காஸா வட்டகையில் இஸ்ரேலின் அத்துமீறலைக் கண்டித்து சுமார் 130 வரையான நாடுகளின் ஆதரவுடன் ஐ.நாவின் பாதுகாப்பு சபைக்கு வந்த பிரேரணையை மறுபடியும் வீட்டோ பாவித்து அமெரிக்கா தடைசெய்தது. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்புரிமை நாடுகளில் 14 நாடுகள் ஆதரிக்க, அமெரிக்கா மட்டும் வீட்டோ பாவித்து இந்த நாசத்தை செய்துள்ளது. வீட்டோவைப் பாவித்த பின்னர் கருத்துரைத்த அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சூசன் றைஸ் கூறும்போது இரண்டு தரப்பும் கடும் போக்கைக் கடைப்பிடிப்பதால் வீட்டோவை பாவிப்பதாக தெரிவித்தார். அரபுலீக் பல்வேறு நாடுகளுடன் உருவாக்கிய மேற்கண்ட பிரேரணை ஒரேயொரு வீட்டோவால் சிதறடிக்கப்பட்டது. ஐ.நாவின் கட்டமைப்பு தவறானது என்பதையும், அங்கு ஐந்து நாடுகள் மட்டும் வீட்டோ அதிகாரத்துடன் இருப்பதுமே இன்றைய உலகின் மோசமான அவலங்களுக்குக் காரணம் என்ற வேதனைகள் இன்னொரு தடவை அமெரிக்க வீட்டோவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக