யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுடன் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாக லங்கா கார்டியன் செய்தித் தளம் அதிர்ச்சிகரமான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்கள் அனைத்தும் இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரணவினால் வழிநடாத்தப்படுவதாக அவ்விணையம் தெரிவிக்கின்றது.
அதற்கான பயிற்சிகள் வவுனியாவில் நடாத்தப்பட்டு வரும் பயிற்சி முகாம் ஒன்றில் வைத்து வழங்கப்படுவதாகவும், அப்பயிற்சி முகாம் விவசாயப் பண்ணை என்ற போர்வையிலேயே செயற்படுவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் பயிற்சி பெற்று நபர்கள் வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மாத்திரமன்றி எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான முக்கியஸ்தர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுவதாகவும் அவ்விணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விவசாயப் பண்ணையுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் தொடர்பிருப்பதாகவும் லங்கா கார்டியன் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக