புதன், 2 பிப்ரவரி, 2011

எம் தமிழ் சொந்தங்கள் சிந்திய இரத்தத்திற்கு இலங்கை பதில் கூறும் காலம் நெருங்குகிறது - சீமான்

ஈழத்தின் தமிழ்ச் சொந்தங்களும்,தமிழக மீனவர்களும் சிந்திய கண்ணீருக்கும், இரத் தத்திற்கும் இலங்கை பதில் சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாகையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற் கொடை செய்து கொண்ட முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும்,திரைப்பட இயக்குனருமான சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது. அடக்கு முறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர். அடக்குமுறை அதன் வாசலை பெரிதாக் குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்ப பூட்டுக்களுக்குமான திறவுகோல் ஆட்சி அதி காரம் என்று அம்பேத்கார் கூறியுள்ளார்.

அந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தவிர நம் இன விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை.ஈழச்சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர் வடித்ததுண்டா?இந்தியா விரும்பிய போரைத் தான் இலங்கை அரசாங்கம் நடத்தி முடித் திருக்கிறது என்று ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­ கூறுகிறார். இதற்கு இங்கு மறுமொழி ஏதாவது உண்டா?தமிழ் இனத்திற்கு சீமான் உண் மையாக இருக்கிறான் என்பதால் என் எதிரிகள் என்னைக் கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு சீமான்,செத்தால் இந்த மண் ணில் ஒரு இலட்சம் சீமான் உருவாகுவார்கள் என்பதை என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தில் நம் தமிழ்ச் சொந்தங்களும், இங்கே மீனவ மக்களும் சிந்திய கண்ணீருக் கும் ,இரத்தத்திற்கும் இலங்கை பதில் சொல் லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான் என்னென்ன வித்தைகள் காட்ட போகி றேன் என்பதை ஐந்து வருடம் பொறுத்திருந்து பாருங்கள். எந்த இலட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டானோ அந்த இலட்சியத்தை நிறை வேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.

அ.தி.மு.கவை சீமான் ஆதரிப்பதாக பதறித் துடிக்கிறார்கள். அ.தி.மு.கவை ஆதரிப் பதாக நான் சொல்லவில்லை. ஈழத்தமிழர் விடு தலைக்காக பேராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை. என் இனத்தை கொன்று குவிக்கக் கார ணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை நான் எதிர்க்கிறேன்.தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க நினைத் தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலை யை வீழ்த்திய அந்த காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் என் இரத்தத்தில் ஊறிய யுத்த மும்,நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிபும் ஆகும்.

ஆந்திராவில் தனி தெலுங்கான கோரி போராடும் சந்திரசேகரராவ் போல் தமிழ கத்தில் தன்மான தமிழர்கள் அப்போது இருந் திருந்தால் நம்மிடம் இருந்து கச்சதீவு பறி போயிருக்காது.இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பது மட்டுமே நம் மீனவ சொந் தங்களை பாதுகாப்பதற்கான வழி.இதற்காக தமிழர்கள் ஒன்று திர ண்டு போராட வேண்டும். நாம் அளிக் கும் வாக்கு நம்மை ஆள வா? நம்மை நாமே ஆள வா?என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் மக்க ளின் அறிவா யுதம்.வாக்கு அதற்கான கருவி.எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க வேண்டும். 2011இலிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக இருக்கும். இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும்.2016இல் தி.மு.க, அ.தி.மு.கவிற்கு மாற்றுச் சக்தியாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தனதுரையில் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக