புதன், 16 பிப்ரவரி, 2011

கனிமொழி எம்.பி கைதாம்! அப்பனுக்கு மகள் தப்பாம பொறந்திருக்கு!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை கைது செய்து தடுத்து வைத்திருப்பதை கண்டித்து, இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க எம்பியுமான கனிமொழி மற்றும் திமுக தொண்டர்கள் நேற்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் கைது நாடகத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்தகாலங்களில் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் படுகொலைசெய்யப்பட்டபோது கண்மூடி வேடிக்கை பார்த்த தி.மு.க அரசும் இந்த கனிமொழி அம்மையாரும் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக போராட்டத்தில் குதித்திருப்பது எல்லாம் வருகின்ற தேர்தலில் மீனவர்களின் வாக்குகளை சுருட்டத்தான் என்கிறார்கள் தமிழ்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள்.

சொல்லிவைத்ததுபோல இன்று கருணாநிதியின் மகள் கனிமொழி போராட்டங்களில் இறங்கியுள்ளார். அப்பனுக்கு மகள் தப்பாம பொறந்திருக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

மீனவர்களை விடுவிக்கவேண்டுமாம். இனி இதை வைத்து கருணாநிதியின் கட்சி காலத்தை ஓட்டும். தமிழக தேர்தல் நெருங்கவிருக்கும் ஓர் இரு தினங்களுக்கு முன்பாக அந்த 106 மீனவர்களையும் சொல்லிவைத்தது போல இலங்கை அரசு விடுவிக்கும்.

அப்போது மீனவ சமூகத்திற்கு விடிவு தேடித்தந்த ஐயா கலைஞர் வாழ்க! என கோஷமிடுவார்கள். மீனவர்களின் விடுதலைக்கு வித்திட்ட செம்மல் ஐயா கலைஞர் என்பார்கள். அத்தோடு கரை ஓரக் மீனவர்களின் வாக்குகளை சுருட்டமுடியும் இது தான் ஐயா முச்சக்கரமுதல்வரின் மாஸ்டர் பிலான்.

இந்தியாவின் மெகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்காளியான கனிமொழி ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்ற கேள்வி நிலுவையில் இருக்க இவ்வாறான தேர்தல் கைது நாடகங்களின் தொல்லை இனி அதிகரிக்கும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக