வியாழன், 17 பிப்ரவரி, 2011

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன, அனைத்துலக விசாரணைகளுக்கு பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களும் இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

சிறீலங்காவில் கடந்த 25 வருடங்களாக நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரேனுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக