சனி, 12 பிப்ரவரி, 2011

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்க்ஷின் சினவத்ரா, இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் இரகசிய பேச்சுவார்த்தை.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்க்ஷின்  சினவத்ரா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்  ஒருவருடன் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு விஜயம் செய்து இன்று அதிகாலை மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் பிரதமர் பதவியில் நீக்கப்பட்ட சினவத்ரா, தாய்லாந்திலிருந்து வெளியேறி, அவரது மனைவியுடன் துபாயில் வசித்து வருகிறார் தனிப்பட்ட ஜெட் விமானமொன்றில் அவர்  இலங்கை வந்திருந்தார்

சினவத்ராவின் இலங்கை விஜயத்தின் இரகசியத்தைக் காத்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்  ஒருவர் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்
தான் உழைத்த பணத்தில் ஒரு பகுதியை சினவத்ரா இலங்கையில் முதலீடு செய்துள்ளார் . அவர் தாய்லாந்தின் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்       ராஜபக்சேவை சந்திக்க பல முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

அத்துடன் சினவத்ரா கடந்த வருடம் தனது பிறந்த தினத்தை இலங்கையில் கொண்டாடியிருந்தமையும் குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக