இன்று காலமும் சூழலும் மாறி கொண்டு இருக்கின்றது.இன்று அமெரிக்காவில் ராஜபக்சவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்கு,பிரிட்டனில் வழக்கு,லட்ச தமிழர்களை படுகொலை செய்து மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிகளிக்குள் அடைத்து வரலாறு காணாத கொடுமைகளை புரிந்த ராஜபக்ச வீழ்வது உறுதி.தம்பி பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பிறப்பது உறுதி.நல்ல செய்திகள் வந்து கொண்டு இருகின்றன.நம்பிக்கையோடு இருங்கள் தமிழீழம் பிறப்பது நிச்சயம், என்றார் மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்.
இன்று(26.2.11) கரூரில் "அலைவரிசை யார் கைவரிசை"? என்ற தலைப்பில் நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நாஞ்சில் சம்பத் அவர்கள்,அண்ணா வளர்த்தெடுத்த கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு வெறும் பதவிக்காகவும் பணத்திற்காகவும்,சோனியாவிடம் கையேந்தி நிற்கிறது திமுக. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடியை கொள்ளை அடித்தவர் கருணாநதி.இனத்துரோகி கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் கி.வீரமணி பெரியாரின் கொள்கைகளை கருணாநிதியிடம் குறைந்த விலைக்கு விற்றவர்.இந்த இனத்துரோகி, ஊழல் பெருச்சாளிக்கு ஆதரவளித்து பேசி வரும் சுப.வீரபாண்டியன்,ஜகத் கஸ்பர் போன்றவர்களை தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார்.இந்த துரோகிகளின் அணிக்கு எதிராக மதிமுக,பெரியார் திராவிட கழகம் போன்ற அமைப்புகள் கைகோர்த்து நிற்கின்றன.
நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில், நடிகர் விஜயகாந்த், விஜய், என்று வலுவான வெற்றி கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இந்த கூட்டணி தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது.கருணாநிதி சிறைக்கு செல்வது உறுதி என்று நாஞ்சில் சம்பத் பேசினார். முன்னதாக பேசிய கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணி அவர்கள் ஈழ தமிழர்களை காட்டி கொடுப்பதற்கு இத்தாலி சோனியாகாந்தி கருணாநிதிக்கு கொடுத்த கூலி தான் இந்த 1,76,000 கோடி என்று சாடினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற்ற "சமர் பா" குமரனின் ஈழம் தொடர்பான எழுச்சி பாடல்கள் எல்லோரையும் கவர்ந்தது.நிகழ்ச்சிக்கு மதிமுக கரூர் நகர செயலாளர் திரு.N.P.K.பாலமுருகன் தலைமை தாங்கினார்.மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் திரு.பூங்கொடி சாமிநாதன்,அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் திரு.சீனிவாசபெருமாள், ஆரத்தியாபொன்னுசாமி,திரு.கபினிசிதம்பரம்,கலையரசன்,ஆசை சிவா,ஈழபாரதி,J.P.செல்வம்,கல்யாணி பாஸ்கர் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக