வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு உதவியாக 462 மில்லியன் ரூபாயை வழங்குவதாக அமெரிக்கா நேற்று அறிவித் துள்ளது.இவ் உதவியின் மூலம் 3 இலட்சத்து 71 ஆயிரம் பேருக்குத் தேவையான அத்தியா வசிய உணவுப் பொருட்கள் யுஸ்எயிட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது.இவ் வருட ஆரம்பத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்ட 319 மில்லியன் ரூபாய் வெள்ள நிவாரண நிதிக்கு மேலதிகமாக இந் நிதி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் கடந்த வருடத்திலும் இவ் வருட ஆரம்பத்திலும் 3.6 பில்லியன் ரூபாய் உணவு உதவியாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக