ஓமந்தை தடுப்பு முகாம் மூடப்படவுள்ளது என்று சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.ஓமந்தையில் உள்ள பாடசாலைகளே தடுப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாடசாலைகளை மீள ஒப்படைக்குமாறு பொதுமக்கள் மற்றும் பெற்றோரால் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகளுக்கு அமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் இணைத்துக்கொள்வதற்கு அரசால் அவர்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்படும். எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக