செவ்வாய், 29 மார்ச், 2011

கிளிநொச்சி கடற்படை முகாம் பெண் சிப்பாய் தற்கொலை

விபத்தில் தனது கணவர் பலியானதை அறிந்து  மிகவும் வேதனையடைந்த சிறீலங்கா கடற்படையின் பெண் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு கடற்படை முகாமில் பணியாற்றிவரும் சிறீலங்கா கடற்படையின் பெண் சிப்பாய் ஒருவர் தனது கணவர் கொல்லப்பட்டதால் கவலையில் தற்கொலை செய்துள்ளார்.
மேற்படி கடற்படைச் சிப்பாயின் கணவர் வசந்தா கருணாதிலக (23)  என்பவரும், அவரின் நண்பரும் இரணைமடு முகாமுக்கு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது, மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் உந்துருளி, ரிப்பர் ரக பாரஊர்தியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் தனது கணவர் கொல்லப்பட்டதை அறிந்த நிலுகா தமயந்தி என்ற பெண் கடற்படைச் சிப்பாய் தனது ஊருக்குச் சென்று தற்கொலை செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக