செவ்வாய், 29 மார்ச், 2011

ஐ.நா நிபுணர்கள் குழு இங்கு எந்தவொரு விசாரணைகளையும் நடத்த முடியாது!


எந்தவொரு அனைத்துலக குழுவும் விசாரணை நடத்தும் நோக்கில் சிறிலங்காவுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
அலரிமாளிகையில் நேற்றக்காலை கொழும்பைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ள நிபுணர்கள் குழு சிறிலங்காவுக்கு வந்து நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திக்க முடியும். அவர்களிடம் சாட்சியம் அளிக்க முடியும்.
ஆனால் ஐ.நா நிபுணர்கள் குழு இங்கு எந்தவொரு விசாரணைகளையும் நடத்த முடியாது.
அதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இது தெளிவான விடயம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
அவர்கள் மேலும் காலஅவசாசம் தேவை எனக் கோரினால் அதுபற்றி பரிசீலிக்க முடியும்.
லிபியா விவகாரத்தில் பொதுமக்களின் மரணத்தையும், நாட்டின் இறைமை மீறப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பொதுமக்களைக் கொலை செய்யும் எவருடனும் நாம் இருக்கமாட்டோம்.
அதேவேளை, எந்தவொரு நாட்டினது இறைமை மீறப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக