புதன், 16 மார்ச், 2011

படுவான்கரைக்கு புலம்பெயந்தவர்கள் உதவமுன்வரவேண்டும் – அரியநேந்திரன்!

போரினாலும் மழைவெள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் உதவ வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்
பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாலை நேர வகுப்புகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.

இந்த பாடசாலை பல ஆண்டுகளாய் இடம்பெற்ற போரினாலும் பல இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட பாடசாலையாகும் இதே போன்று இந்த பிரதேசத்தில் பல பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

முக்கியமாக இவ்வாறான பாடசாலைகளில் ஆசிரியப் பற்றாக்குறை நிலவுகின்றது இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன இவற்றை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதற்கு மாலைநேர வகுப்புகளை இந்த பாடசாலைகளில் நடாத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள வருகை தந்த வறிய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும் அரியநேத்திரன்  வழங்கி வைத்தார். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக