ஆயுதங்களை கொள்வனவு செய்த கடனுக்காக காலி முகத்திடல் காணி சீனாவுக்கு விற்பனை!
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சீன நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களுக்கும் வெடிப்பொருட்களுக்கும் சிறிலங்கா இன்னும் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கடனுக்கு பதிலாக சீன விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஹொட்டல் ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கம் காலி முகத்திடலில் உள்ள காணியை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. காலிமுகத்திடல் காணி சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை ஏற்றுக்கொண்ட கோத்தபாயா ஆயுதம் வாங்கிய கடனுக்கு பதிலாக இந்த காணி வழங்கப்படுகிறது என்ற தகவலை மறுத்துள்ளார்.
காலிமுகத்திடலைச் சூழவுள்ள இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு ஆகியன இடமாற்றப்படவுள்ள நிலையில் அங்குள்ள காணியில் நட்சத்திர ஹோட்டலை அமைப்பதற்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
உல்லாச ஹோட்டல், பல் செயற்பாட்டுக் கட்டிடம் மற்றும் கடைத்தொகுதிக் கட்டிடம் என்பன அமைப்பதற்காக 6 ஏக்கர் காணி சீன விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு அருகில், ஷாங்ரி லா ஹோட்டல் நிறுவனம் 6 ஏக்கர் காணியில் ஹோட்டல் அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தகாலத்தின்போது ஊயுவுஐஊ நிறுவனத்திடமிருந்து போக்குவரத்துமற்றும் போர் விமானங்களை சிறிலங்கா அரசு கொள்வனவு செய்திருந்தது. இதற்கான கடன் இந்நிறுவனத்திற்கு செலுத்தப்படாத நிலையில் காலி முகத்திடலில் உள்ள பெறுமதியான காணி அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக