லிபியாவுக்கு எதிராக ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் சில நாடுகளை குலை நடுங்க வைத்துள்ளதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது. இதில் முக்கியமானது அரபுலீக்காகும். இன்றய ஜனநாயக எழுச்சிப் போராட்டங்களில் கதிகலங்கி நிற்பதில் அரபு நாடுகள் முன்னணி வகிக்கின்றன. அந்த நாடுகளை இணைத்த அரபு லீக் இதில் முக்கியமானது. நேற்றைய ஐ.நா தீர்மானம் அரபுலீக்கை பெரும் கலக்கத்தில் தள்ளியுள்ளது. இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து அளவுக்கு அதிகமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று அரபுலீக் செயலர் அமர் மூஸா தெரிவித்துள்ளார். அதேவேளை பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படாமல் ஒரு பிரேரணை வெளிவந்திருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆசிய வட்டகையில் சீனா கதிகலங்கிப் போயுள்ளது. அதேவேளை சீனாவோடு சேர்ந்து இந்தியாவும் ஐ.நா பாதுகாப்பு சபை பிரேரணையை ஆதரிக்க மறுத்திருக்கிறது. காடு சுட எலி புறப்படும் என்பார்கள். நேற்றய பிரேரணை காடு சுடப்பட்டுவிட்டதைக் காட்டுகின்றது. சிறீலங்கா, பர்மா போன்ற நாடுகளின் எலிகள் மூச்சடக்க ஆரம்பித்திருப்பது இயல்பான உண்மையே. சவுதி மன்னரைப்போல இலங்கையிலும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையை தமிழருக்கு வழங்கி, இராணுவத்தை வெளியேற்றி, தமிழ் போலீஸ் நிர்வாகத்தை அமல் செய்தால் சிறீலங்கா இந்தச் சுனாமியில் இருந்து தப்பும், இல்லையேல் அதை வெள்ளம் அடித்துச் செல்வதை இந்தியாவால் தடுக்க முடியாது. இன்று ஐந்து நாடுகளுடன் எதிர்த்து வாக்களித்ததைப் போல அன்றும் வெறுமனே எதிர்த்துவிட்டு வழிவிட வேண்டிய நிலை இந்தியாவுக்கு வரும். வெள்ளம் வர முன்னர் அணை கட்டுவதே சரியான வழியாகும். அடக்குமுறை, இராணுவ சர்வாதிகாரம் படுதோல்விக்கு வந்துவிட்டதை கடாபியின் நாளைய வீழ்ச்சி தெளிவாக உணர்த்தப்போகிறது.வெள்ளி, 18 மார்ச், 2011
ஐ.நா தீர்மானம் அரபுலீக் நடுக்கம்! இந்தியா குலை நடுக்கம் !
லிபியாவுக்கு எதிராக ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் சில நாடுகளை குலை நடுங்க வைத்துள்ளதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது. இதில் முக்கியமானது அரபுலீக்காகும். இன்றய ஜனநாயக எழுச்சிப் போராட்டங்களில் கதிகலங்கி நிற்பதில் அரபு நாடுகள் முன்னணி வகிக்கின்றன. அந்த நாடுகளை இணைத்த அரபு லீக் இதில் முக்கியமானது. நேற்றைய ஐ.நா தீர்மானம் அரபுலீக்கை பெரும் கலக்கத்தில் தள்ளியுள்ளது. இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து அளவுக்கு அதிகமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று அரபுலீக் செயலர் அமர் மூஸா தெரிவித்துள்ளார். அதேவேளை பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படாமல் ஒரு பிரேரணை வெளிவந்திருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆசிய வட்டகையில் சீனா கதிகலங்கிப் போயுள்ளது. அதேவேளை சீனாவோடு சேர்ந்து இந்தியாவும் ஐ.நா பாதுகாப்பு சபை பிரேரணையை ஆதரிக்க மறுத்திருக்கிறது. காடு சுட எலி புறப்படும் என்பார்கள். நேற்றய பிரேரணை காடு சுடப்பட்டுவிட்டதைக் காட்டுகின்றது. சிறீலங்கா, பர்மா போன்ற நாடுகளின் எலிகள் மூச்சடக்க ஆரம்பித்திருப்பது இயல்பான உண்மையே. சவுதி மன்னரைப்போல இலங்கையிலும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையை தமிழருக்கு வழங்கி, இராணுவத்தை வெளியேற்றி, தமிழ் போலீஸ் நிர்வாகத்தை அமல் செய்தால் சிறீலங்கா இந்தச் சுனாமியில் இருந்து தப்பும், இல்லையேல் அதை வெள்ளம் அடித்துச் செல்வதை இந்தியாவால் தடுக்க முடியாது. இன்று ஐந்து நாடுகளுடன் எதிர்த்து வாக்களித்ததைப் போல அன்றும் வெறுமனே எதிர்த்துவிட்டு வழிவிட வேண்டிய நிலை இந்தியாவுக்கு வரும். வெள்ளம் வர முன்னர் அணை கட்டுவதே சரியான வழியாகும். அடக்குமுறை, இராணுவ சர்வாதிகாரம் படுதோல்விக்கு வந்துவிட்டதை கடாபியின் நாளைய வீழ்ச்சி தெளிவாக உணர்த்தப்போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக