வெள்ளி, 18 மார்ச், 2011

எப் – 16 குண்டு வீச்சு விமானங்கள் பறக்கத்தயார்..

தற்போது டென்மார்க்கில் இருந்து லிபியா பறப்பதற்கான எப்-16 இரக போர் விமானங்கள் ஆறும் தயார் நிலையில் நிற்கின்றன. இன்று விடிகாலை 06.00 மணிக்கே அனைத்து விமானங்களும் பறக்கத் தயாராகிவிட்டன. இவைகளுக்கு உதவியாக கேர்க்குலீஸ் இராட்சத விமானம் ஒன்றும் பறக்க இருக்கிறது. அத்தோடு 100 முதல் 150 வான்படை வீரர்களும் முற்றிலும் தயாராகிவிட்டனர். அது மட்டுமல்லாமல் பெருந்தொகையான அதி நவீன கருவிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கடாபியின் இராணுவம் நினைத்துப் பார்க்க முடியாத அதி நவீன கருவிகள் கூடவே எடுத்துச் செல்லப்படுகின்றன. கடாபியின் மகன் அல் இஸ்லாம் டென்மார்க்கில் உயர்கல்வி படித்தவர். அவர் டேனிஸ் விமானங்களை சந்திக்க இருக்கிறார். டென்மார்க் விமானங்கள் இப்போது லிபியா போவது போருக்காகவே.. நடைபெறப்போவது போர் என்று டேனிஸ் பிரதமர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். டேனிஸ் அடிப்படைச் சட்டங்களின்படி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாது டென்மார்க் போருக்கு செல்ல இயலாது. ஆகவே பாதுகாப்பு அமைச்சர் பிரேரணையை பாராளுமன்று கொண்டு வந்துவிட்டார். கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. பி.ப. 14.00 மணிக்கு முடிவுக்கு வரும் என்று பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்குள்ளும் தாமதம் ஏற்படுமானால் இன்று இரவே விமானங்கள் புறப்படும். எப்படியோ கடாபி என்பவர் பெரும் சிக்கலை சந்திக்கப்போவது ஊர்ஜிதமாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக