வெள்ளி, 18 மார்ச், 2011

இலங்கையில் காணாமல்போன 5653பேர் பற்றி தகவல் இல்லை!

இலங்கையில் போர் நடந்த காலத்தில் காணாமல் போன 5653பேர் பற்றி இதுவரை தகவல் இல்லை என ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 16ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் ஆசிய மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி பூஜா பட்டல் தெரிவித்துள்ளார்.


போர் முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும் குடும்பத்தலைவர்களை இழந்த பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் சிறிலங்கா அதிபருக்கு அதிகூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆசிய மனித உரிமை அமைப்பு பிரதிநிதியின் குற்றச்சாட்டிற்கு இலங்கையின் சார்பில் கலந்து கொண்டவர்கள் பதில் எதனையும் வழங்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக