ஓஸ்ரேலிய கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலர் நேற்றிரவு கட்டிடத்திற்கு தீவைத்ததாகவும் அக்கட்டிடத்திற்கு ஆயிரக்கணக்கான டொலர் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஒஸ்ரேலிய சமஷ்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
250பேர் கொண்ட குழு ஒன்று பொல்லுகள் மற்றும் தீவைக்கும் உபகரணங்கள் சகிதம் காவல்துறையினருடன் மோதல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆள்அடையாளம் தெரியாதபடி அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும் இதற்கு பின்னர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் அகதிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தடுப்பு நிலையத்தை பராமரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுமார் ஆறு தங்குமிட நிலையம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் இதில் தங்கியிருந்த 1800பேரில் 300பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தடுப்பு முகாமை சமஷ்டி காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக குடிவரவு திணைக்கள அதிகாரி சண்டிலொகான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக