வெள்ளி, 25 மார்ச், 2011

நெருக்கடிகளுக்குள் வாழும் மீள்குடியேறிய மக்கள்!


thunukkaayமுல்லைத்தீவு தேறாங்கண்டல், ஐயங்கன்குளம், மருதங்குளம், புத்துவெட்டுவான், பழைய முறிகண்டி உள்ளிட்ட கிராமங்களில் மீளக் குடியமர்ந் துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் என்றுமில்லாதவாறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.



முல்லைத்தீவு துணுக்காய் உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட மேற்படி கிராமங்களில் சுமார் ஐநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் மீளக்குடி யமர்ந்துள்ள நிலையில் இக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் எவையும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.
குறிப்பாக இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் இவர்கள் தறப்பாள் குடிசை களிலும் பன்னிரெண்டு தகரங் களைக்கொண்டு அமைக்கப்பட்ட குடிசைகளிலுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர வீடுகள் எவையும் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அத்துடன் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதாயின் நீண்ட தூரத்தில் உள்ள மல்லாவி நகருக்கோ அல்லது கிளிநொச்சி நகருக்கோ இந்த மக்கள் செல்லவேண்டும். 
கடந்த காலங்களில் இடப் பெயர்வுக்கு முன்னர் ஐயங்கன் குளத்தில் ஆரம்ப மருத்துவமனை ஒன்று இயங்கிவந்தது.
அத்துடன் அவசர நோயாளிகளைக் கொண்டு செல்லக் கூடிய நோயாளர் காவுவண்டி வசதிகளும் இருந்தன. தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லையென்றும் இதனால் இப்பகுதி மக்கள் வேறு இடத்துக்கே மருந்துவ தேவைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்குச் சரியான போக்குவரத்து வசதிகள் எவையும் இல்லையென்றும் இக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ9 கொக்காவில் சந்தியினையும் வெள்ளாங்குளம் மாங்குளம் வீதியினையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள ஐயங்கன்குளம் புத்துவெட்டுவான் ஊடான சுமார் 20 கிலோ மீற்றர் வரையான வீதி கடந்த பல ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுவதுடன் பாலங்களும் மதகுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக