சனி, 26 மார்ச், 2011

யாழ்.குடத்தனை மக்கள் வீதி மறியல் போராட்டம்!



kudaththanaiகுடத்தனை கொட்டோடைப் பிரதேசத்தில் கனியவளங்களை அழிக்கும் நோக்கில் மணல் அகழப்படுவதை எதிர்த்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணி தொடக்கம் 2.30 மணிவரை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இப்பகுதியில் மண் அகழப்படுவது இயற்கையைப் பாதிக்கும் எனவும் எனவே மணல் அகழ்வை இடைநிறுத்துமாறும் மகேஸ்வரி நிதியத்தில் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்திருந்தும் எந்தவிதமாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மணல் அகழும் உழவு இயந்திரங்களை கொட்டோடைப் பகுதியில் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மணல் ஏற்றும் பணிகள் சிலமணிநேரம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக