வியாழன், 10 மார்ச், 2011

பிரான்சும் இங்கிலாந்தும் லிபியப் போராளிகளின் தலைமையை அங்கீகரித்துள்ளன. வேஷம் போடும் மேற்குலக நாய்கள்....!

லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராகப் போராடிவரும் போராளிகளின் தலைமைத்துவத்தை அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த தலை மைத்துவமாக அங்கீகரிக்க பிறான்ஸும் அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மற்றைய மேற்கு நாடுகளையும் இந்த அங்கீகாரம் நோக்கி நகருமாறும் வேண்டியுள்ளன.

வெறும் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை முன்வைத்து லிபியாவின் தலைவரை போர்க்குற்றவாளியாக்கி, லிபியாவின் வான்பரப்பை விமானப் பறப்பிற்கான தடைப் பிரதேசமாக அறிவித்து, தமது பாரிய யுத்தக் கப்பலகளை அப்பகுதி நோக்கி நகர்த்தி வரும் மேற்குலகு இறுதியாக போராளிகளின் தலமையை அங்கீகரித்துமுள்ளன.


2009 இல் வன்னியில் 80,000 தமிழர்கள் நாய்களைப்போல வேட்டையாடப் பட்டனரே, அப்போது என்கே போயிருந்தன இந்த மேற்குநாடுகள்?? வெறும் 100 பேருக்காக கண்ணீர் வடிக்கும் இந்தப் போலி சனநாயக வாதிகள் 80,000 பேர் வேட்டையாடப்படும்போது வாயே திறக்கவில்லை. அழிந்து முடியட்டும் என்றுதானே பார்த்துக்கொண்டிருந்தனர்.


100 பேரைக் கொன்றவன் போர்க்குற்றவாளி, அவனது எதிரிகள் மக்கள் பிரதிநிதிகள். ஆனால் 80,000 பேரைக் கொன்றவன் சனநாயகவாதி, அவனின் கொலை வெறித்தாண்டவத்தை எதிர்த்துப் போராடியவர்கள் பயங்கரவாதிகள்.


வேஷம் போடும் மேற்குலக நாய்கள்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக