சனி, 16 ஏப்ரல், 2011

அறிக்கை பொதுமக்களுக்கு சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும்: சனல் போர்

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சில தினங்களில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் நேற்று (15) தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பத்து தினங்களில் வெளியிடப்படும் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றை அமைப்பதற்கு அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சயையினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு சுயாதீனமாக ஆதாரங்களை கோரியபோது, சனல் போர் செய்தி நிறுவனமும், இரண்டு காணொளி ஆதாரங்களையும், பல புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிறீலங்காவின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை என்ன முடிவை மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் தான் நீதியின் நடைமுறை தங்கியுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சiயின் பிரதிநிதி சனல்போர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா தொடர்பில் ஐ.நா மேற்கொள்ளும் நடவடிக்கை உலகில் வன்முறைகளில் ஈடுபடும் அரசுகளுக்கு ஒரு காத்திரமான செய்தியை கொண்டு செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக