சனி, 16 ஏப்ரல், 2011

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் மஹிந்த கவலை!

banki_moon_mahindaஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது புதுவருடக் கொண்டாட்டத்தை கெடுத்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லங் காதீப பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதிக்கு புது வருட வாழ்த்தை தெரி விப்பதற்காக ஜனாதிபதியை தொடர்பு கொண்ட குறித்த ஊடகவியலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரித்துள்ளார். இதனையடுத்து கடும் ஆத்திரத்துடன் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியை தொடர்புகொண்ட ஊடகவியலாளர் ஜனாதிபதியுடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தனக்கும் அரசாங் கத்திற்கும் கடுமையான பல குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த சூழ்ச்சிக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பான் கீ மூனின் அறிக் கைக்கு எதிராகவும் டைம்ஸ் பத்திரிகை உலகில் பலவாய்ந்த தலைவர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாகவும் விளம்பரங்களை செய்யுமாறும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசி யக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கும்வரை அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப் படாததாலும் அது குறித்து அரசாங்கம் உத் தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடாத நிலையிலும் குழப்பமடைந்து அறிக்கைகளை வெளியிடும் தேவையில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.இதற்கு கட்சியின் மற்றுமொரு பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசி யக் கட்சியின் பதில் தலைவர், கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி அழைத்து கலந்துரையாடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக