திங்கள், 18 ஏப்ரல், 2011

நித்திரையா???? .... எழுப்பி விடுடுங்கள் ... இல்லையேல் அடித்துத் துரத்துங்கள்!!!! - Nellaiyan

போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் அறிக்கை கசிந்து இரண்டு நாட்களுக்கு மேலாகின்றது!! ... ஆனால் ஐநாவின் அறிக்கை வர முன்னம் சிங்கள அரசு, அதற்கெதிரான வலிந்த தாக்குதல்களிலும், தற்பாதுகாப்பு தாக்குதல்களிலும் மூர்க்கமாக ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.வீதிப்போராட்டங்களுக்கான அழைப்பு, சர்வதேசத்தை கட்டுப்படுத்த அவர்களின் சிநேக நாடுகளுடன் ஆலோசனை என ஓர் போரையே பிரகடனப்படுத்தியது போல் செயற்படுகிறார்கள்!!!

ஆனால் இற்றைவரை நமக்கான அரசென்று தேர்ந்தெடுத்தவர்கள் மூச்சே விடாமல் நித்திரையில் இருக்கிறார்கள்??? அல்லது பிணங்களாகி விட்டதனால் மூச்சு விடாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை????

இந்த நாடு கடந்த அரசுதான் வாய் திறக்க வெட்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு போட்டிக்கு போட்டியாக இயங்கும் நெடியவன்களோ, உலக தமிழர் அமைப்போ, பிரித்தானிய தமிழர் அமைப்போ, புலத்தில் இயங்கும் எல்லாமே வாயடைத்து நிற்கிறார்கள்!!

... நேற்றும் ஓர் லண்டனிலிருந்து இயங்கும் வானொலி ... காஸ்ரோக்களினால் சந்தையில் தனியாருக்கு விற்கப்பட்டு, பின் அவ்வானொலி நிர்வாகம் காஸ்ரோக்களுடன் ஏற்பட்ட மனக்குரோதத்தினால், நாடு கடந்த அரசுக்கு ஆதரவளிக்க முற்பட்டது வேறு கதை!! ... ஆனால் அவ்வானொலியே, எம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டோரும், தம்மை எம் பிரதிநிதிகளாக பிரகடனம் செய்தோரும் வாழா வெட்டியாக பார்த்துக் கொண்டிருப்பதை பலத்த கண்டனம் செய்தார்கள்!!!

புலத்தில் எம் பிரதிநிதிகள் என அறியப்பட்டோர் எல்லாம் தமக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கும், கதிரைப் போட்டிகளுக்கும் வீதிகளில் இறங்கி அடிபடுகிறார்கள்/அடிபடவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அங்கு 100000 மக்கள் அழிக்கப்பட்டும், காணாமல் போயிருப்பதுமாக சர்வதேச ஊடகங்களும், ஐநாவும் கூறியும் செய்வது அறியாது செயலிழந்து நிற்கிறார்கள்!!!

எங்கே இவர்களுக்கு பின் திருவோரும், இவர்களுக்காக குரல் கொடுப்போரும் ... தயவு செய்து இவர்களை தட்டி எழுப்பி விடுங்கள்! ... தட்டிக்கேட்காது விட்டால் இவர்கள் தூங்குவது போல் பாசாங்கு தொடர்ந்து செய்வார்கள்!!

இவர்களிடம் கேளுங்கள் ...

* ஐநா அறிக்கை கசிந்து இற்றுவரை என்ன செய்தீர்கள், அதனை வெளிக்கொணர???
* புலத்தில் மக்கள் எழுச்சிக்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறீர்களா???

இவர்கள் சரியான பதிலளிக்க தவறின் .... இவர்களையும் தூக்கி எறிய எம் இனம் தயங்காது ... வரலாற்றை புரட்டுங்கள் ... இல்லை தொடர்ந்து கதிரைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தொடர்ந்து இயங்க விரும்பின் பின் ஓர் ஒட்டுக்குழுவாக செயற்பட மட்டும் சாத்தியமுள்ளது, அவ்வாறு இயங்குங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக