
சிறீலங்கா அரசு . விடுதலைப் புலிகளிடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தராக பணியாற்றியவர் எரிக் சோல்கெய்ம் ஆகும். இப்போது வன்னியில் நடைபெற்ற போரில் பொதுமக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவலம் ஐ.நாவினாலேயே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்த தார்மீக கருத்தை வெளியிட வேண்டிய பாரிய பொறுப்பு எரிக் சோல்கெய்ம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவருடைய கருத்து இதுவரை வெளிவரவில்லை. சர்வதேச ரீதியாக இதை பலரும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்தியா தனது தார்மீகக் கருத்தை இதுவரை வெளியிடவில்லை. நிருபாமாராவ் யாதொரு கருத்தையும் கூறாமலே காலம் கடத்தி வருகிறார். நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார், இந்து ராம், துக்ளக் சோ உட்பட பலர் உறைநிலை மௌனம் காத்து வருகிறார்கள். ஐ.நாவின் கருத்தையும், சர்வதேச சட்டங்களையும் மதித்து கருத்துரைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இவர்களுக்கு இருப்பதை மக்கள் வலுவாக உணர்கிறார்கள். மேலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா போன்றவர்களும் வாய் திறக்காதிருப்பது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக