ஞாயிறு, 12 ஜூன், 2011

சுட்டநாய் வேண்டுமா சுடாத நாய் வேண்டுமா..?

பேராசிரியர் சிற்றம்பலம் இன்று யாழ். குடாநாட்டில் உருப்படியாக சிந்திக்கத் தெரிந்தவர்களில் ஒருவராக இருக்கிறார். அன்று பார்வதி அம்மாளின் இறுதிக்கிரியையில் நாய்களை சுட்டுப்போட்டனர். இன்று சிற்றம்பலம் அவர்களுடைய வீட்டிலும் நாயை சுட்டு பையில் கட்டி போட்டுள்ளார்கள். தமிழர் என்றால் அவர்கள் நாய்கள், அவர்களை நாய்கள் போல சுட்டுத்தள்ளுவோம் என்ற சிங்கள இனவாத குறியீட்டு நிகழ்வாக இது அமைந்துள்ளது. இது குறித்த செய்தி வருமாறு :
யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறை பேராசிரியரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான பேராசிரியர் கே. சிற்றம்பலத்திற்கு கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவித்துள்ளன.

முள்ளிவாய்க்கால் போர் மகாபாரதத்தில் நடைபெற்ற குருசேஷ்திர போரை போன்றது அதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிடப்போவதில்லை என தமிழ் நாளேடு ஒன்றிற்கு சிற்றம்பலம் நேர்காணல் ஒன்றை அண்மையில் வழங்கியிருந்த நிலையில் இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாய் ஒன்றை பையில் போட்டு அவரின் வீட்டினுள் இனந்தெரியாதவர்கள் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேசயம், ஊர்காவற்றுறை தேவாலயத்தின் பங்குத்தந்தை வண. சி. ஜி. ஜெயக்குமாருக்கும் கொலை அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்துலக குழுவினருக்கு யாழின் உண்மையான நிலையை எடுத்துக் கூறியதால் ஜெயக்குமாருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக