திங்கள், 13 ஜூன், 2011

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் என்ன தமிழா
முற்றுப் புள்ளியா....
போர்க் குணம் கொண்ட
தமிழா உனக்கு முடிவுரையா.....
(முள்ளி)

அள்ளிப் போன உயிர்கள் மீது
ஆணையில்லையா.......
அடுத்தவன் தேசத்தில்
வாழ்வதுதான் - உன்
கால எல்லையா.......
(முள்ளி)
ஆயிரம் தமிழர் உயிர்களை
அங்கே அள்ளிப் போனார்கள்
அதைத் தடுக்க யாரடா....
வந்து கைகள் தந்தார்கள்
(முள்ளி)
வானம் பார்த்து தமிழா
இனியும் வாழ்வைக் கழியாதே-தமிழ்
மானம் காத்த மறவரை நீயும்
மறந்தே வாழாதே
(முள்ளி)
ஒரு
முடிவில் கூட புதிய தொடர்
தொடரும் என்பதை மறவாதே-நல்ல
முடிவுமொரு விடிவாய் அமையலாம்
முகம் இளந்தே போகாதே.
(முள்ளி)
போர் முடிவின்
வடிவம் மாற்றி நாங்கள்
தொடரப்போகிறோம்.....
விடியும் பாதை இதுதான் என்று
தெரிந்தே போகிறோம்....... (முள்ளி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக