வன்னி நிலப்பரப்பின் இறுதி யுத்தக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளை உலகமே அறியமாட்டாது என நினைத்துக் கொண்டிருந்த சிறிலங்கா அரசின் நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தவிடுபொடியாகிவிட்டன. யுத்தம் நடந்து முடிந்தவுடனேயே அனைத்து அநியாயங்களும் அம்பலத்துக்கு வந்திருந்தாலும் இப்போது அவைகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் என்ற நிலையில் காண்பிக்கப்பட்ட செனல்-4வின் ‘இலங்கை கொலைக்களம் ஆவணப் காணொளியானது கடந்த 17 ஆம் திகதி பகிரங்கமாகவே காண்பிக்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட காணொளி ஒளிபரப்படும் என்று முன்னராகவே அறிவிப்புச் செய்யப்பட்டவுடனேயே வியர்த்து விறுவிறுத்துப் போன சிறிலங்கா அரசினால் அதனைத் தடுப்பதற்கான எந்தச் சக்தியும் அற்ற நிலையிலேயே காணப்பட்டது.
கடந்த வாரம் செனல்-4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இந்த ‘இலங்கைக் கொலைக்களம்’ ஆவணக் காணொளியை பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு இலட்சம் என முதலில் கிடைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அதன் பின்னரான தகவல்களின்படி அது பத்து இலட்சத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால்இஇதில் கவலை தரும் விடயம் என்னவென்றால்இஇந்தக் காணொளியை அன்றைய தினத்தில் இவ்வளவு பேர் பார்த்திருந்தாலும் ஐ.நா. செயலாளர் நாயகமான பான் கீ மூன் பார்வையிடவில்லை என்பதேயாகும். இதே பான் கீ மூனே வன்னி யுத்த இறுதிக் கட்டத்திலும் அதனை நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அடுப்பங்கரைப் பூனையாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை அவர் நியமித்த நிபுணர் குழு அறிக்கையையே சுட்டி நிற்கிறது. பான் கி மூனின் இந்த அசட்டை நடவடிக்கை அவரின் இரண்டாம் கட்ட பதவிக்கான ஆதரவை பெறுவதற்காகவே இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் இப்போ உறுதியாகிவிட்டது. இனி பான் கி மூன் என்ன செய்வார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
செனல்-4வில் இந்த ஆவணக் காணொளி ஒளிபரப்பட்டதனையடுத்து சர்வதேசத்திலும் சிறிலங்காவிலும் காரசாரமான கருத்துகள் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டுமென பிரித்தானியா உட்பட பல நாடுகளும் அமைப்புகளும் அழுத்தமாகத் தெரிவித்திருந்தன.
ஆனால் உள்ளுரில் அரச கட்சியும் ‘அரசவால்’ கட்சிகளும் இந்தக் காணொளியை முற்றாக நிராகரித்ததுடன் சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ஒரு சதி எனவும் இந்தக் கட்சிகள் வியாக்கியானங்கள் கூறின. இவையனைத்தும் செயற்கையாகச் செய்யப்பட்டவை பணம் கொடுத்து தயாரிக்கப்பட்டவை புலிகளின் ஆதரவாளர்களின் தேவையையே இந்தக் காணொளி நிறைவேற்றியுள்ளது என்றெல்லாம் அடுக்கடுக்கான விமர்சனங்களும் இந்தக் கட்சிகளிடமிருந்து கிளம்பத் தொடங்கியிருந்தன. அதேவேளை எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரை அனைத்தினையும் எதிர்ப்பதும் விமர்சிப்பதுமே அவர்கள் கொள்கையாக இருந்தாலும் இந்த விடயத்தில் பெரும்பாலான கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டன. இந்தக் காணொளி ஆவணத்தின் அடிப்படையிலேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவை கேட்டுக் கொண்டன.
ஆனால் சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் இவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தன. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தாங்கள் மக்களை மீட்கும் மீட்பர்களாகவே செயற்பட்டோம் என்றும் சிறிலங்கா படைத்தரப்பினர் பாவங்கள் செய்யாத அப்பாவிகள் என்ற தொனியிலுமே இன்றும் நின்று கொண்டிருக்கிறது.
சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ இந்தக் காணொளி தொடர்பில் புலிகளின் ஆதரவாளர்கள் மீது குறிவைத்துச் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் சிக்கலில் மாட்டிவிடுவதற்காக சனல் 4 க்குப் பணம் கொடுத்துத் தயாரித்துள்ள வீடியோதான் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு அவதூறை ஏற்படுத்தப் பாடுபடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இப்போது சனல் 4 ஐ தமது ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறிய அவர் தமிழ் மக்களைக் காப்பாற்றப் போராடிய இராணுவத்தினர் ஒருபோதும் பொதுமக்களைக் கொல்லவே இல்லை என்று தெரிவித்து தனது படைதரப்புக்குப் பன்னீர் தெளித்துள்ளார்.
ஆனால் அந்த ஆவணப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கெலம் மெக்ரே தனது தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதியினாலும் அவரது சகோதரனாலும் போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசி மூலமே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் அடித்துக் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து பி.பி.ஸி. அவரிடம் துருவிக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப்போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் வல்லுனர்களை கொண்டு தாம் உறுதி செய்த பிறகே அவற்றை ஒளிபரப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் காண்பிக்கப்பட்ட இரண்டு படக்காட்சிகளின் தொகுப்புகள் இலங்கையில் போர் நடைபெற்ற போது எடுக்கப்பட்டவை. அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. அதன் பின்னராக வரும் காணொளிகள் இலங்கை இராணுவத்தினரால் கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்டவை. அதில் நிராயுதபாணிகளாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை காட்டும் படங்கள் இறந்தவர்களின் நிர்வாண உடல்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தும் காட்சிகள் இலங்கை இராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை என்றும் அவர் பி.பி.ஸிக்குத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறெல்லாம் அவர் தனது தரப்புவாதத்தை முன்வைக்க ஒரு தொழில்நுட்ப நிபுணரின் கருத்தைக் கேட்டுக் குறிப்பிட்;ட ஆவணப்படம் போலியானது என சிறிலங்கா அரசு அடம்பிடித்து நிற்கிறது. அத்துடன் இந்த விடயத்தில் இன்று அரசும் அரசுடன் இணைந்து செயற்படும் கட்சிகளும் நேரத்துக்கு ஒரு கருத்துடன் கூடிய குழப்பமான அறிக்கைகளை வெளியிடுகின்றன. இது அவர்களின் தடுமாற்றத்ததையே காட்டுகிறது.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட ‘நாட்டையோ தனது படையினரையோ காட்டிக் கொடுக்கமாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளமையும் ஏதோ ஒன்றைப் புலப்படுத்துவதாகவே உள்ளது.
செனல்-4 விடயத்தைப் பொறுத்த வரையில் சிறிலங்கா அரசானது ‘குற்றமுள்ளவன் மனம் குறுகுறுக்கும்’ என்பது போன்றே செயற்படுகிறது என்பது மட்டும். உண்மை. அத்துடன் வன்னியில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதனை இல்லை என நிரூபிப்பதற்காகச் சிறிலங்கா அரசு படும்பாடு அது தொடர்பில் அரசினால் தெரிவிக்கப்படும் கருத்துகளுமே குற்றம் செய்தமையை நிரூபிக்கக் கூடிய சாயலைக் கொண்டனவாகவே உள்ளன.
சிறிலங்கா அரசு தான் தவறு செய்யவில்லை என்ற தனது வாதத்தை முன்வைத்திருக்கும் நிலையில் சுதந்திரமாகக் குற்ற விசாரணையை நடத்தவோ அல்லது விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவோ விருப்பம் தெரிவிப்பதில் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? சிறிலங்கா அரசு தனது நிரபராதித்தனத்தை இவ்வாறான விசாரணைகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்பபடுத்துவதனை விட்டுவிட்டு ஒரு தலைப்பட்சமாக தன்னை நிரபராதியாக்க முயற்சிப்பது சரியானதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதானதோ அல்ல தான் ஒரு நிராபதி என்பதனைத் தானே கூறிக்கொண்டிருப்பதனை விட நெஞ்சை நிறுத்தி விசாரணைகளுக்கு முகங்கொடுத்து உள்ளுரிலும் சர்வதேசத்திலும் தன்னை நிரபராதியாக்கிக் கொள்ள முடியுமல்லவா?
திருப்பங்கள்
இதேவேளை இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக பிரித்தானியாவின் செனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளித் தொகுப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எல்லாமே பொய் சனல்4 வீடியோ ஓர் கட்டுக்கதை என கூறி நிராகரித்த சிங்கள அரசு இப்போ நல்லிணக்க ஆனைக்குழு விசாரிக்கும் என ஏன் கூறவேண்டும்?
இதேவேளை இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக பிரித்தானியாவின் செனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளித் தொகுப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எல்லாமே பொய் சனல்4 வீடியோ ஓர் கட்டுக்கதை என கூறி நிராகரித்த சிங்கள அரசு இப்போ நல்லிணக்க ஆனைக்குழு விசாரிக்கும் என ஏன் கூறவேண்டும்?
அடுத்ததாக இன்று போர்க்குற்றத்தில் ஈடுபடுகின்ற சிங்கள இராணுவமும் தாம் தனியாக விசாரிக்கப்போகின்றோம் என கூறியுள்ளது. அனைத்தும் பொய்யென கூறிய இராணுவம் இப்போ சனல்4 தொலைக்காட்சி நிறுவனமானது தமக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பி வைத்தால் தாம் தனியாக விசாரிப்போம் என கூறியுள்ளது.
கோத்தபாய சனல்4 வீடியோவை நிராகரிக்க, இராணுவம் விசாரிக்கபோவதாக அறிவித்துள்ளது.
இவை எல்லாம் எவற்றை காட்டுகின்றது என்றால் சிங்கள அரசு உட்பட அரசியல் வாதிகள் , தலைமை எல்லோரும் குளம்பிய நிலையில் உள்ளனர். அல்லது விசாரணை என்ற போர்வையில் அனைத்துலக அழுத்தத்தினை தணிப்பதற்காகவா?
சிங்களப்படைத்தரப்பும் , நல்லிணக்க ஆணைக்குழுவும் இந்த சணல் 4 வீடியோவினை பரிசோதித்து இரு வேறு தீர்மானங்களை வெளிக்கொண்டு வரலாம்.
1. இந்த சனல்4 வீடியோ பொய்யானது என அடித்துக்கூறலாம்.
2. இந்த வீடியோவில் சில உண்மையானவைதான் அது தொடர்பாக இராணுவ நீதிமன்றம் ஒன்றினை அமைத்து ( பொன்சேகாவுக்கு செய்தது போல்) சிலருக்கு தண்டனை வழங்கப்போவதாக அறிவிக்கலாம். இதற்காக கழுத்தைப்பிடித்து தள்ளிவிட பொன்சேகாவின் ஆட்கள் இருக்கின்ரார்கள் இல்லையென்றாலும் சிங்கள நாட்டிற்காக தம்மை அர்ப்பணிக்க சில பிக்கு இராணுவத்தினர் உள்ளனரே அவர்கள் தாம் தான் படைத்தலைமையின் கட்டளை இன்றி கொலைகளை செய்ததாக ஒத்துக்கொள்ளலாம்.
2. இந்த வீடியோவில் சில உண்மையானவைதான் அது தொடர்பாக இராணுவ நீதிமன்றம் ஒன்றினை அமைத்து ( பொன்சேகாவுக்கு செய்தது போல்) சிலருக்கு தண்டனை வழங்கப்போவதாக அறிவிக்கலாம். இதற்காக கழுத்தைப்பிடித்து தள்ளிவிட பொன்சேகாவின் ஆட்கள் இருக்கின்ரார்கள் இல்லையென்றாலும் சிங்கள நாட்டிற்காக தம்மை அர்ப்பணிக்க சில பிக்கு இராணுவத்தினர் உள்ளனரே அவர்கள் தாம் தான் படைத்தலைமையின் கட்டளை இன்றி கொலைகளை செய்ததாக ஒத்துக்கொள்ளலாம்.
எது எப்படி இருப்பினும் சிங்கள படைத்தரப்பின் “ சனல்4 வீடியோவினை தாம் தனியாக விசாரிக்கப்போகின்றோம்” என்ற அறிவிப்பு; நல்லிணக்க ஆணைக்குழுவில் அவர்களுக்கு கூட நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
இது அடிப்படையில் சில கருத்து முரண்பாடுகளையும் நம்பிக்கையீனங்களையும் தோற்றுவித்துள்ளதாகவே காண முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக