செவ்வாய், 21 ஜூன், 2011

இசைப்பிரியாவின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்

தமிழீழத்  தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் இசைப்பிரியா, இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்கை தளமாக கொண்டு இயங்கும் ஊடக உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரமான காணொளியினை சனல் 4 வெளியிட்டுள்ளது என ஊடகவியலாளர் பாதுகாப்பு செயற்குழு அதிகாரி பொப் டயர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக