ஞாயிறு, 17 ஜூலை, 2011

தமிழகத்தின் எந்த சுபநிகழ்வுகளிலும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒளிப்படம்.

news


முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த தமிழனத்தை விழிப்படையவைத்திருக்கின்றது. ராசீவ்காந்தி  என்ற ஒற்றை உயிரிழப்பினை வைத்து தாய்த் தமிழகத்தை தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து பிரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் மே-18 2009 ற்கு பின்னர் தோல்வியடைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரப் பதாதைகள்.
தமிழகத்தில் தற்போது எங்கு எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலம் தலைவரது படம் தவறாது இடம்பெற்றுவிடுகின்றது. காதுகுத்து நிகழ்வு பிறந்தநாள் நிகழ்வு திருமண விழா கடைதிறப்பு விழா புதுமனை குடிபுகு விழா என்று மங்களகரமாக நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்பு பதாதைகள் வைத்து கொண்டாடுவது தமிழகத்து மரபாகிவிட்டது.
news
அதிலும் எப்போதுமே உலகத் தமிழர்களின் தலைவராக விளங்கிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது புகைப்படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதை பார்க்கமுடிகின்றது. இதுவரை சினிமாவில் காகிதக் கத்தியில் சண்டை போடும் கதாநாயகர்களின் படங்களை அச்சிட்டு பெருமைப்பட்ட தமிழகம் இன்று உண்மையான நாயகன் கரிகாலனது புகைப்படங்களை வடிவமைத்து பெருமகிழ்வடைகின்றது.
news
இது மாத்திரமல்லாது பிறக்கும் குழந்தைகளிற்கு தலைவரது பெயர் உள்ளிட்ட மாவீரர்களது பெயரினை சூட்டி வரலாறு படைக்கின்றது தமிழகம். எண்பது காலப்பகுதியில் இருந்ததைப் போன்று தற்போது எங்கும் எதிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மயமாகிவருகின்றது. தற்போதைய தலைமுறையில் ஆக்கபூர்வமாக செயற்பட விளையும் ஒரு பகுதியினர் முன்னிலும் வேகமாக செயலாற்றி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக