செவ்வாய், 28 செப்டம்பர், 2010

எம்.வி.சன்.சி தமிழர்களில் 41 குழந்தைகளுக்கு கல்வி நடவடிக்கைகள் சிறையில் ஆரம்பம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை கடந்த மாதம் 13 ஆம் திகதி சென்றடைந்த இலங்கைத் தமிழர்களில் 41 குழந்தைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தடுப்பு முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆகி உள்ளன.
எம்.வி.சன்.சி கப்பல் பயணிகள் 493 பேரில் 54 பேர் குழந்தைகள்.

Burnaby, B.C., youth detention centre இல் தாய்மாருடன் இருக்கின்றார்கள். இவர்களில் 41 பேருக்கு வகுப்புக்கள் அங்கேயே ஆரம்பமாகி விட்டன. ஏனைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்பதால் வகுப்புக்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

சிறுவர்கள் மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சின் திட்டங்களின் கீழ் The Burnaby School District இக்கல்விச் சேவையை வழங்குகின்றது. The Burnaby School District இன் பணிப்பாளர் Reno Ciolfi இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக