மன்னார் மாவட்டத்தின் பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் தலை மற்றும் கால்கள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. பொலிஸார் சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக