சனி, 30 அக்டோபர், 2010

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிராக 200 இற்கு மேற்பட்ட மலேசியா தமிழ் மக்கள் கடந்த புதன்கிழமை (27) கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக பிறீ மலேசியா ருடே நாளேடு தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் உள்ள "லிட்டில் இந்திய" என்ற வர்த்தகத் தொகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமை மலேசியா வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மலேசியா தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களையும், முக்கிய தலைவர்களையும் மலேசியா காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.

கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வர்த்தகம் செய்யும் இடத்தில் இடம்பெறும் விழாவில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய இந்திய தலைவர் எவ்வாறு பங்குபற்றலாம் எனவும், அந்த இடத்திற்கு ஏன் லிட்டில் இந்தியா என பெயர் வைத்தது எனவும் ஆhப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சிறீலங்காவில் என்ன நடக்கின்றது எனப் பாருங்கள், தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பில் இந்தியா மௌனம் சாதித்து வருகின்றது. தமிழக மீனவர் மீதான சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல் தொடர்பிலும் இந்தியா மௌனம் சாதித்து வருகின்றது என மலேசியா தமிழ் தலைவர்களில் ஒருவரான எம் எஸ் அர்சுணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக